காணாமல் போன இளைஞர் சடலமாக மீட்பு
செய்யாறு அருகே காணாமல் போன இளைஞர் தூக்கிட்ட நிலையில் புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டார்.


செய்யாறு அருகே காணாமல் போன இளைஞர் தூக்கிட்ட நிலையில் புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டார்.
செய்யாறை அடுத்த தூளி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ராஜேந்திரன் மகன் கார்த்திக் (23). இவர், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கார்த்திக் கடந்த 11-ஆம் தேதி வீட்டிலிருந்து பைக்கில் வெளியே சென்றார். பின்னர், வீட்டுக்கு திரும்பி வரவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், கார்த்திக் ஓட்டிச் சென்ற பைக் அதே கிராமத்தில் உள்ள ஏரிக்கரை பகுதியில் இருந்ததும், அங்குள்ள வேப்ப மரத்தில் தூக்கிட்டுக்கொண்ட நிலையில் கார்த்திக்கின் சடலம் கிடந்ததும் தெரியவந்தது. தகவலறிந்த செய்யாறு போலீஸார் கார்த்திக்கின் சடலத்தை மீட்டு, உடல்கூறு பரிசோதனைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கார்த்திக் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...