எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

திருவண்ணாமலை மாவட்டத்தில்   1.20 லட்சம் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள்: அமைச்சர் தகவல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை 1.20 லட்சம் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தெரிவித்தார்.

News image
Updated On :16 நவம்பர் 2017, 1:21 am

DIN

திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை 1.20 லட்சம் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தெரிவித்தார்.
ஆரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப் பள்ளிகளில் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டு, 1,291 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கிப் பேசியதாவது:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் திட்டம் தொடர்ந்து 6-ஆவது ஆண்டாக செயல்படுத்தப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது முதல் தற்போது வரை மொத்தம் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 360 மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மதிப்பு ரூ.176 கோடியே 79 லட்சம் ஆகும்.  
ஆரணியில் இன்று மட்டும் 1,291 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மதிப்பு ரூ.ஒரு கோடியே 59 லட்சமாகும். கல்விக்காக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்த விலையில்லா நோட்டு, புத்தகம், பேனா, பென்சில், சீருடை, காலணி, சைக்கிள், மடிக்கணினி உள்பட 14  திட்டங்களை தற்போதைய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார் என்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, செய்யாறு எம்எல்ஏ தூசி மோகன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார், செய்யாறு கல்வி மாவட்ட அலுவலர் ராஜசேகர், நகரச் செயலர் அசோக்குமார், ஒன்றியச் செயலர் பி.ஆர்.ஜி.சேகர், பேரவை நிர்வாகி பாரிபாபு, பாசறை மாவட்டச் செயலர் ஜி.வி.கஜேந்திரன், மாவட்ட துணைச் செயலர் டி.கருணாகரன், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் அ.கோவிந்தராசன், மாவட்டப் பொருளாளர் சுபாஷ்சந்திரபோஸ், எஸ்.எஸ். பள்ளித் தாளாளர் பூபதி, தலைமை ஆசிரியர்கள் மகேஸ்வரி, பி.சுடர்கொடி, அந்தோணிமரியசெல்வம் உள்ளிட்ட பலர் கலந்து
கொண்டனர்.
கொருக்கையில்...:  செய்யாறு கல்வி மாவட்டம், கொருக்கை அரசு மேல்நிலைப் பள்ளியில் வாழ்குடை, முனுகப்பட்டு, கொருக்கை ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த 324 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தலைமை வகித்தார். செய்யாறு தொகுதி எம்எல்ஏ தூசி கே.மோகன் முன்னிலை வகித்தார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்குமார் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், 324 மாணவர்களுக்கு ரூ.40.10 லட்சம் மதிப்பிலான மடிக்கணினிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் செய்யாறு மாவட்ட கல்வி அலுவலர் வி.ராஜசேகரன், வட்டாட்சியர் மகேந்திரமணி, அதிமுக அவைத் தலைவர் டி.பி.துரை, மாணவரணி எம்.மகேந்திரன், ஒன்றியச் செயலர் எஸ்.கிருஷ்ணன், அதிமுக பிரமுகர்கள் கே.ஆர்.தசரதன், பி.பெருமாள், தாமரைகண்ணன், ரவி, தேவராஜ், பழனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.