தெள்ளாறு ஒன்றிய பாஜக செயற்குழுக் கூட்டம்
வந்தவாசியை அடுத்த தெள்ளாறு ஒன்றிய பாஜக செயற்குழுக் கூட்டம் தெள்ளாறை அடுத்த முளப்பட்டு கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.


வந்தவாசியை அடுத்த தெள்ளாறு ஒன்றிய பாஜக செயற்குழுக் கூட்டம் தெள்ளாறை அடுத்த முளப்பட்டு கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஒன்றியத் தலைவர் குமார் (எ) பச்சையப்பன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் கிருஷ்ணகணேசன், கலை இலக்கியப் பிரிவு மாவட்டத் தலைவர் பி.முத்துசாமி, வந்தவாசி நகரத் தலைவர் வி.குருலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய பொதுச் செயலர் எ.திருநாவுக்கரசு வரவேற்றார். மாவட்டத் தலைவர் எஸ்.நேரு சிறப்புரை ஆற்றினார்.
மாநில பொதுக்குழு உறுப்பினர் முருகேசன், மாவட்டச் செயலர் கவிதா, ஒன்றிய இளைஞரணித் தலைவர் கே.பாலாஜி, ஒன்றிய விவசாய அணித் தலைவர் எ.பிச்சாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர். தெள்ளாறு ஒன்றிய கிராமங்களுக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்துகளை தடையின்றி தினசரி இயக்க வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் அனைத்து விவசாயிகளுக்கும் கடன் வழங்க வேண்டும். வேளாண்மைத் துறை மூலம் அளிக்கப்படும் சலுகைகள் குறித்த தகவல்கள் விவசாயிகளுக்கு சென்றடைய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தெள்ளாறு ஒன்றிய கிராமங்களில் சேதமடைந்துள்ள அனைத்து சாலைகளையும் விரைந்து சீரமைக்கவும், சுகாதாரமற்று உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளை சுத்தம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...