மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

வேலூர், திருவண்ணாமலை மாவட்ட காவல் ஆய்வாளர்கள் 12 பேர் பணியிட மாற்றம்

வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் பணியாற்றி வந்த காவல் ஆய்வாளர்கள் 12 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

News image
Updated On :16 நவம்பர் 2017, 1:18 am

DIN

வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் பணியாற்றி வந்த காவல் ஆய்வாளர்கள் 12 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து வேலூர் சரக டிஐஜி வனிதா செவ்வாய்க்கிழமை இரவு பிறப்பித்த உத்தரவு:
வேலூர் மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளராக இருந்த எம்.லோகநாதன் தெற்கு காவல் நிலையத்துக்கும், லஞ்ச ஒழிப்புப் பிரிவில் பணியாற்றிய டி.அசோகன் மாவட்ட தனிப் பிரிவுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றிய எஸ்.சுதாகர், திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறுக்கும், லஞ்ச ஒழிப்புப் பிரிவு ஆய்வாளர் இ.திருநாவுக்கரசு ஆற்காடு கிராமியத்துக்கும், ஜெ.ஆனந்தன் ஆற்காடு நகரத்துக்கும், அங்கிருந்த எம்.அசோக்குமார் லத்தேரிக்கும், ஜி.வெங்கடகிருஷ்ணன் திருவண்ணாமலை மாவட்டத்துக்கும் பணியிடம் மாற்றப்பட்டனர். பொன்னை காவல் ஆய்வாளர் பி.ஏ.அப்பாசாமி பேர்ணாம்பட்டுக்கும், ஆற்காடு கிராமிய ஆய்வாளர் ஆர்.எஸ்.பார்த்தசாரதி பொன்னைக்கும், செய்யாறு ஆய்வாளர் கே.மங்கையர்கரசி திருவண்ணாமலை நகர குற்றப் பிரிவுக்கும், பேர்ணாம்பட்டு ஆய்வாளர் ஆர்.சீனிவாசன் ஆம்பூர் நகரக் காவல் நிலையத்துக்கும் மாற்றப்பட்டனர்.
திருவண்ணாமலை மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளராக பொறுப்பு வகித்த கே.நிலவழகன் அதே பணிக்கு நிரந்தரமாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.