47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

அனக்காவூர் வட்டாரத்தில் விவசாய உற்பத்தியாளர் குழு கூட்டம்

அனக்காவூர் வட்டாரத்தைச் சேர்ந்த எச்சூர், தவசி, கோட்டகரம், நர்மாபள்ளம், செளந்தர்யபுரம் ஆகிய கிராமங்களில் விவசாய உற்பத்தியாளர் குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :16 நவம்பர் 2017, 1:18 am

DIN

அனக்காவூர் வட்டாரத்தைச் சேர்ந்த எச்சூர், தவசி, கோட்டகரம், நர்மாபள்ளம், செளந்தர்யபுரம் ஆகிய கிராமங்களில் விவசாய உற்பத்தியாளர் குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
அனக்காவூர் வட்டாரம், எச்சூர் கிராமத்தில் நடைபெற்ற விவசாய உற்பத்தியாளர் குழு கூட்டத்துக்கு தலைமை வகித்த வேளாண்மை உதவி இயக்குநர் ஏ.எம்.சாந்தி, கூட்டுப் பண்ணையத் திட்டத்தில் செயல்படுத்தப்படும் உற்பத்திக் குழுக்களுக்கு வணிகம் (விதை உற்பத்தி செய்தல், காளாண் வளர்ப்பு, பால் உற்பத்தி மற்றும் வேளாண் இடுபொருள் மையம்) குறித்த தகவல்களை விரிவாக எடுத்துரைத்தார்.
மேலும், ரூ.5 லட்சம் வரையில் தொகுதி நிதியில் இருந்து வாங்க வேண்டிய வேளாண் கருவிகள் குறித்தும், 5 குழுக்களை ஒருங்கிணைந்து சுமார் ரூ.25 லட்சம் மதிப்புள்ள நெல் அறுவடை இயந்திரம் போன்ற பெரிய கருவிகள் வாங்கி குழுவினர் பயனடையலாம் என்றும் அவர் ஆலோசனை தெரிவித்தார்.
எச்சூர் கிராமத்தில் நடைபெற்ற விவசாய உற்பத்தியாளர் குழுக் கூட்டத்தில்  உதவி வேளாண்மை அலுவலர், தொழில்நுட்ப மேலாளர், உதவி தொழில்நுட்ப மேலாளர் உள்ளிட்டோர் பங்கேற்று விவசாயக் குழுவினர் கொண்டு வந்த தீர்மானங்களை பதிவேடுகளில் பதிவு செய்தனர்.
பின்னர், கூட்டுப் பண்ணையம் செயல்படுத்தும் விதம், அதன் மூலம் விவசாயிகள் எவ்வாறு பயனடையலாம் என்பது குறித்து தெரிந்துகொள்ளும் வகையில் திரைப்படம் திரையிடப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதே போன்று தவசி, கோட்டகரம், நர்மாபள்ளம், சௌந்தர்யபுரம் ஆகிய கிராமங்களிலும் விவசாய உற்பத்தியாளர் குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஒரு குழுவுக்கு 100 விவசாயிகள் வீதம் 5 குழுக்களைச் சேர்ந்த 500 விவசாயிகள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.