/

திருவண்ணாமலையில் 64-ஆவது கூட்டுறவு வார விழா

திருவண்ணாமலையில் 64-ஆவது கூட்டுறவு வார விழாவையொட்டி புதன்கிழமை ரத்த தான முகாம் நடைபெற்றது.

News image
Updated On :16 நவம்பர் 2017, 1:19 am

DIN

திருவண்ணாமலையில் 64-ஆவது கூட்டுறவு வார விழாவையொட்டி புதன்கிழமை ரத்த தான முகாம் நடைபெற்றது.
திருவண்ணாமலை வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம், கூட்டுறவு நகர்ப்புற வங்கி, தமிழ்நாடு மாநில கூட்டுறவு தொடக்க வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து ரத்த தான முகாமை நடத்தின.
வேங்கிக்கால் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க கூட்டுறவு மருந்தக வளாகத்தில் இந்த முகாம் நடைபெற்றது. முகாமுக்கு திருவண்ணாமலை வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத் தலைவர் எஸ்.பழனி தலைமை வகித்தார்.
துணைப் பதிவாளர்கள் ஏ.சரவணன், ஏ.மாதவி, எம்.மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலர் எஸ்.ஆதிமூலம் வரவேற்றார். கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் பா.ரேணுகாம்பாள் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு ரத்த தான முகாமை தொடக்கிவைத்தார்.
தொடர்ந்து, கூட்டுறவு மேலாண்மை நிலைய பயிற்சி மாணவர்கள், கூட்டுறவுத் துறை அலுவலர்கள், தொடக்க வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை வங்கிப் பணியாளர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் அளித்தனர்.
முகாமில் மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளர் எம்.ராமச்சந்திரன், சார் பதிவாளர்கள் எம்.செந்தில்வேல், ஆர்.நாராயணசாமி, கே.வெங்கடேசன், பி.அண்ணாமலை, டி.சுப்பிரமணி, மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண் இயக்குநர் பி.பாண்டுரங்கன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.