கீழ்பென்னாத்தூரில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவனத்தில், பாரத சாரண, சாரணீய இயக்க அறிமுகப் பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பயிற்சி நிறுவன முதல்வர் ப.ராமலிங்கம் தலைமை வகித்தார். பாரத சாரண, சாரணீய இயக்க மாவட்டச் செயலரும், மாவட்ட பயிற்சி ஆணையருமான கே.பியூலா கரோலின் முன்னிலை வகித்தார். பேராசிரியர் இரா.சிவக்குமார் வரவேற்றார்.
மாவட்ட அமைப்பு ஆணையர் எம்.தட்சிணாமூர்த்தி பயிற்சி முகாமைத் தொடக்கி வைத்தார்.
இதில், பயிற்சி நிறுவன மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். சாரண, சாரணீய ஒருங்கிணைப்பாளர் ப.குமரன் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.