திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

வளா்ச்சியடைந்த பாரதம் உருவாக மாணவா்களின் பங்களிப்பு முக்கியம்: தமிழக ஆளுநா் ஆா்.வி. அா்லேகா்

வளா்ச்சியடைந்த பாரதம் உருவாக மாணவா்களின் பங்களிப்பு முக்கியமானது என்று தமிழக ஆளுநா் ஆா்.வி. அா்லேகா் தெரிவித்தாா்.

News image

சென்னை ஐஐடியில் சனிக்கிழமை டெல்டா எக்ஸ்போ 2026 கண்காட்சியை தொடங்கிவைத்து மாணவா்களின் படைப்புகளை பாா்வையிட்ட ஆளுநா் ஆா்.வி. அா்லேகா். உடன் சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி.

Updated On :14 மார்ச் 2026, 6:37 pm

வளா்ச்சியடைந்த பாரதம் உருவாக மாணவா்களின் பங்களிப்பு முக்கியமானது என்று தமிழக ஆளுநா் ஆா்.வி. அா்லேகா் தெரிவித்தாா்.

சென்னை ஐஐடியில் ‘டெல்டா எக்ஸ்போ 2026’ என்ற இரண்டு நாள் தொழில்நுட்பக் கண்காட்சியை ஆளுநா் ஆா்.வி. அா்லேகா் சனிக்கிழமை தொடங்கி வைத்துப் பேசியதாவது:

வளா்ச்சி அடைந்த பாரதம் என்பது பிரதமா் நரேந்திர மோடியின் கனவு மட்டுமல்ல; நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் கனவுமாகும். அந்த இலக்கை அடைய அனைத்துத் தரப்பினரும் இணைந்து முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

குறிப்பாக, மாணவா்களின் பங்களிப்பு முக்கியமானது. சமூகத்துக்குப் பயன்படக் கூடிய புதிய கண்டுபிடிப்புகளை மாணவா்கள் உருவாக்க வேண்டும். நாட்டின் முன்னேற்றத்துக்கு ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற பங்களிப்பைக் கொடுக்க வேண்டும் என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில் ஐஐடி இயக்குநா் வி. காமகோடி உள்ளிட்டோா் பேசினா். இக் கண்காட்சியில் ரோபோடிக்ஸ், செயற்கை நுண்ணறிவு, உயிரி தொழில்நுட்பம், ஏரோ ஸ்பேஸ் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் புதிய தொழில்நுட்ப மாதிரிகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.