பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

இரு சக்கர வாகனங்கள் மோதல்: ஒருவர் சாவு

வந்தவாசி  அருகே 2 இரு சக்கர வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார்.

News image
Updated On :12 அக்டோபர் 2017, 3:24 am

DIN

வந்தவாசி  அருகே 2 இரு சக்கர வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம், பெருநகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (56). இவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது மகன் சிங்காரகுமாருடன் (15) வந்தவாசிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
வந்தவாசி - காஞ்சிபுரம் சாலை, தாழம்பள்ளம் கூட்டுச்சாலை அருகே சென்றபோது பின்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் (45) என்பவர் இரு சக்கர வாகனத்தில் உள் சாலையிலிருந்து பிரதான சாலையில் திரும்பியுள்ளார். இதனால் நிலைதடுமாறிய 2 இரு சக்கர வாகனங்களும் மோதிக் கொண்டன.
இதில் பலத்த காயமடைந்த சுப்பிரமணி, சிங்காரகுமார், ராமச்சந்திரன் ஆகிய 3 பேரும் வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் தீவிர சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுப்பிரமணி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து வந்தவாசி வடக்கு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.