திருவண்ணாமலை அருகே மணல் கடத்திய லாரியை போலீஸார் பறிமுதல் செய்தனர். லாரி ஓட்டுநரும் கைது செய்யப்பட்டார்.
திருவண்ணாமலையை அடுத்த ஜப்திகாரியந்தல் கிராமத்தில் இருந்து உரிய அனுமதி இல்லாமல் லாரிகளில் மணல் கடத்தப்படுவதாக செங்கம் வட்டாட்சியர் ரேணுகாவுக்குத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து, திங்கள்கிழமை அதிகாலை குறிப்பிட்ட இடத்தில் வட்டாட்சியர் ரேணுகா தலைமையிலான அதிகாரிகள் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, சிமென்ட் நிறுவன ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டு, தார்பாய் போர்த்தியபடி சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் வந்த ஒரு லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது, ஜப்திகாரியந்தல் கிராமத்தில் உள்ள ஆற்றில் இருந்து மணல் கடத்திவரப்பட்டது தெரிய வந்தது.
இதனையடுத்து, லாரியை பறிமுதல் செய்த வட்டாட்சியர் ரேணுகா, திருவண்ணாமலை தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில், லாரியை ஒட்டி வந்தவர் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த வினோத் கண்ணன் (30) என்பதும், லாரி உரிமையாளர் தருமபுரியைச் சேர்ந்த கார்த்தி என்பதும் தெரிய வந்தது. இதனையடுத்து, வினோத்கண்ணனை போலீஸார் கைது செய்தனர். லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்சியில் வாக்குப்பதிவு தொடங்கியது! ஆர்வத்துடன் மக்கள் வாக்களிப்பு!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! விறுவிறுப்பான வாக்குப்பதிவு - நேரலை!

விழுப்புரம் மாவட்டத்தில் வாக்குப்பதிவு தொடங்கியது

பேரவைத் தேர்தல்: மநீம தலைவர் கமல் வாக்களித்தார்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

