மாணவர்கள் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வைப் பெற வேண்டும் என்று திருவள்ளுவர் பல்கலைக்கழத் துணைவேந்தர் முருகன் பேசினார். திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் 42-ஆவது பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி அவர் பேசியதாவது:
பட்டம் பெறும் மாணவர்களாகிய நீங்கள் இதுவரை கல்வியில் முழுமையாக கவனம் செலுத்தி வந்தீர்கள். இனிவரும் காலங்களில் சுற்றுச் சூழல் குறித்த விழிப்புணர்வையும் பெற வேண்டும். தற்போது, புவி வெப்ப நிலை மாற்றம் என்பது பெரும் சவாலாக உள்ளது. இந்தியாவில் ஏராளமான இயற்கை வளங்கள் உள்ளன. குறிப்பாக வேப்பமரம் ஏராளமான நன்மைகள் தரக்கூடியது. எண்ணற்ற வியாதிகளைக் குணப்படுத்தும் வலிமை வேப்ப மரத்துக்கு உண்டு. தமது நாட்டில் விளைகின்ற தானியப் பொருள்கள் ஏராளமான சத்துகளைக் கொண்டுள்ளன. வழக்கமாக உண்ணுகின்ற உணவை விட இத்தகைய பயிறு, தானிய வகைகளை உணவாக உட்கொள்கின்ற போது உடல் நலம் மேம்பாடு அடையும். வண்ணத்துப் பூச்சிகள்,தேனீக்கள் முதலானவை சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கு பெரிதும் தொண்டாற்றுகின்றன. அவற்றை காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு உண்டு என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அஜித்தின் கிளாடியேட்டர்ஸ் ஆவண படத்தின் அறிமுக விடியோ!

தில்லி கேபிடல்ஸ் பந்துவீச்சு; பிளேயிங் லெவனில் மிட்செல் ஸ்டார்க்!

காவியக் காதல் முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!

பச்சைப் பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர் - புகைப்படங்கள்
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

