அமைச்சர் நிர்மலின் சர்ச்சைக்குரிய பேச்சு நீக்கம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக பணிக்கான டெண்டர் வெளியீட்டில் விதிமீறல்!மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

ஆன்மிகப் பாதையில்  இளைய தலைமுறையினர் பயணிக்க வேண்டும்: பொன்னம்பல தேசிக பரமாசாரிய சுவாமிகள்

நமக்கும் சமூகப் பொறுப்புணர்வு இருக்கிறது என்பதை உணர்ந்து பணியாற்ற ஆன்மிகப் பாதையில் இளைய தலைமுறையினர் பயணிக்க வேண்டும்

Updated On :30 ஜனவரி 2024, 10:08 pm IST

நமக்கும் சமூகப் பொறுப்புணர்வு இருக்கிறது என்பதை உணர்ந்து பணியாற்ற ஆன்மிகப் பாதையில் இளைய தலைமுறையினர் பயணிக்க வேண்டும் என்று இளைஞர்களுக்கு பொன்னம்பல தேசிக பரமாசாரிய சுவாமிகள் அறிவுரை வழங்கினார்.
திருவண்ணாமலையில் குன்றக்குடி அடிகளாரின் 693-ஆவது ஆண்டு மகா குரு பூஜை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலை - வேட்டவலம் சாலை, குன்றக்குடி நகரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு ஆதீனப் பிரதிநிதியும், வழக்குரைஞருமான சந்திரமோகன் தலைமை வகித்தார்.
சேஷாத்திரி ஆஸ்ரமத் தலைவர் முத்துக்குமாரசாமி, பேராசிரியர் முத்து, கவிஞர் ஆ.தே.முருகையன், திருவண்ணாமலை திருக்குறள் தொண்டு மையப் பாவலர் ப.குப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 46-ஆவது மகா சன்னிதானம் பொன்னம்பல தேசிக பரமாசாரிய சுவாமிகள் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அருளாசி வழங்கி பேசியதாவது:
நம் பெயருக்குப் பின்னால் போடப்படும் பட்டங்கள் எல்லாம் அறிவல்ல. மனிதத்தின் துன்பத்தைப் புரிந்துகொண்டு அதை அகற்றுவதில்தான் அறிவு புரிந்துகொள்ளப்படும். வாழ்க்கையில் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால் பிறருக்கு உதவ வேண்டும். நமக்கும் சமூகப் பொறுப்புணர்வு இருக்கிறது என்பதை உணர்ந்து பணியாற்ற ஆன்மிகப் பாதையில் இளைய தலைமுறையினர் பயணிக்க வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில், கவிஞர் லதா பிரபுலிங்கம், சர்வதேச எக்ஸ்னோரா துணைத் தலைவர் பா.இந்திரராஜன், புலவர் சண்முகம், சோனாசல அடிகள், ஈரோடு நமச்சிவாயம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.