
218 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள்
செய்யாறு தொகுதியைச் சேர்ந்த சித்தாத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 218 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் செவ்வாய்கிழமை வழங்கப்பட்டன.
செய்யாறு தொகுதியைச் சேர்ந்த சித்தாத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 218 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் செவ்வாய்கிழமை வழங்கப்பட்டன.
பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் பி.ஆர்.ராஜேந்திரன் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வி.கங்காதரன், முன்னிலை வகித்தார்.
இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற செய்யாறு தொகுதி எம்.எல்.ஏ தூசி. கே.மோகன், 218 மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கிப் பேசுகையில், கல்வி தனி மனிதன் வாழ்க்கைக்கு மட்டுமல்ல நாட்டின் முன்னேற்றத்துக்கும் அவசியமானது.
மாணவர்கள் கவனத்தை சிதறவிடாமல், தொலைக்காட்சி, செல்லிடப்பேசி போன்ற பொழுதுபோக்கு சாதனங்களை தேர்வு நடக்கும் வரை ஓரம் கட்டி வைத்து விட்டு அக்கறையுடன் படித்து உயர்ந்த நிலை பெற வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியின் போது பள்ளிக்கு கணினி வாங்கிட எம்.எல்.ஏ தூசி கே.மோகன், சித்தாத்தூர் கிராம பால் கூட்டுறவு சங்கத் தலைவர் பிச்சாண்டி ஆகியோர் தலா ரூ.15 ஆயிரம் வீதம் பள்ளித் தலைமை ஆசிரியரிடம் வழங்கினர்.
செய்யாறு வேளாண்மை விற்பனைக் குழு கூட்டுறவு சங்கத் தலைவர் எம்.மகேந்திரன், திருப்பனங்காடு கூட்டுறவு வங்கி தலைவர் டி.பி.துரை, முன்னாள் அதிமுக ஒன்றியச் செயலாளர் கார்த்திகேயன், முன்னாள் ஊராட்சித் தலைவர்கள் பொன்.லட்சுமணன், ராஜமாணிக்கம், ராஜ்மோகன் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






