செங்கத்தை அடுத்த புதுப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பன்னீர்செல்வம் எம்எல்ஏ திங்கள்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
கலசப்பாக்கம் தொகுதிக்கு உள்பட்டது புதுப்பாளையம் ஊராட்சி. இங்கு, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலபாக்கம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பன்னீர்செல்வம் திங்கள்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது, மருத்துவர்கள், செவிலியர், சுகாதார ஆய்வாளர் வருகைப் பதிவேடுகளை ஆய்வு செய்தார். பின்னர், மருத்துவர்களிடம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். அப்போது, பொதுமக்களுக்கு தரமானசிகிச்சை அளிக்க வேண்டும் என்று மருத்துவர்களிடம் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளதா என ஆய்வு செய்து, நோயாளிகளிடம் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர், மறைந்த தமிழக முன்னாள் முதல் எம்.ஜி.ஆரின் நினைவு தினத்தையொட்டி, புதுப்பாளையம் பேருந்து நிலையத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட அதிமுக பொருளாளர் துரை, பொதுக் குழு உறுப்பினர் பொய்யாமொழி, முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் மீனாகுமாரி புருசோத்தமன், நாகபாடி முன்னாள் ஊராட்சித் தலைவர் சுப்பரமணி உள்ளிட்டோர்
உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்தியாவின் ஏற்றுமதி 15% அதிகரிப்பு!

2029 மக்களவைத் தேர்தல் பிரதமர் வேட்பாளரை இந்தியா கூட்டணி அறிவிக்க வேண்டும்: சிவசேனை

இஸ்ரேல் - ஈரான் இடையே போர்நிறுத்தமா? டொனால்ட் டிரம்ப் பதிவு!

டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுதான் மிகவும் முக்கியம்; அறிமுக வீரர் மானவ் சுதர் கூறியதென்ன?
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP


