/

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 851 மனுக்கள் அளிப்பு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 851 மனுக்கள் பெறப்பட்டன.

Updated On :25 டிசம்பர் 2018, 9:54 am IST

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 851 மனுக்கள் பெறப்பட்டன.
மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் பொ.ரத்தினசாமி, மாவட்ட வழங்கல் அலுவலர் ஹரிதாஸ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் - சிறுபான்மையினர் நல அலுவலர் ஜெ.ராஜேந்திரன் ஆகியோர் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 851 மனுக்களைப் பெற்றுக் கொண்டனர். 
இந்த மனுக்கள் மீதும் ஏற்கெனவே பெறப்பட்டு நிலுவையில் உள்ள மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
கூட்டத்தில், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, பிற்படுத்தப்பட்டோர் - சிறுபான்மையினர் நலத் துறை உள்பட பல்வேறு அரசுத் துறைகள் சார்பில், நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
கூட்டத்தில் கலால் உதவி ஆணையர் தண்டாயுதபாணி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சு.சரவணன், மாவட்ட மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அலுவலர் சா.ஆனந்தராஜ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்படப் பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.