போளூரை அடுத்த ஓகூர் அருகே செல்லும் செய்யாற்றில் மாட்டு வண்டியில் மணல் அள்ளி வந்த 8 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
போளூர் அருகே வேலூர் - திருவண்ணாமலை சாலையில் காவல் உதவிஆய்வாளர் தயாளன் தலைமையிலான போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, போளூரை அடுத்த ஓகூர் அருகே செல்லும் செய்யாற்றில் இருந்து பாக்மார்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன்(27), மோகன்தாஸ் (22), பரசுராமன்(48), ஏழுமலை(30), ஓகூர் கிராமத்தைச் சேர்ந்த சம்பத் (34), அல்லிமுத்து (49) ஆகியோர் உரிய அனுமதியின்றி, மாட்டு வண்டிகளில் மணல் அள்ளி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அவர்கள் 8 பேர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்த போளூர் போலீஸார், மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திறந்தே இருந்த திரைக்கதைப் பள்ளிக்கூடம் | Bhagyaraj | RIP director bhagyaraj

இன்றுவரை பாக்யராஜை நினைத்து மேக்கப் போடும் ஊர்வசி!

மதம் மாறியவருக்கு பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் என சாதிச் சான்றிதழ்: அரசாணையை ரத்து செய்த உயர் நீதிமன்றம்





