தெற்கு மாவட்ட அதிமுக ஆலோசனைக் கூட்டம்: அமைச்சர் பங்கேற்பு
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை - வேலூர் சாலையில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு தெற்கு மாவட்டச் செயலர் பெருமாள் நகர் கே.ராஜன் தலைமை வகித்தார்.
முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, மாவட்டப் பொருளாளர் எம்.எஸ்.நைனாகண்ணு, மாவட்ட துணைச் செயலர் அமுதா அருணாச்சலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரச் செயலர் ஜெ.எஸ்.செல்வம் வரவேற்றார்.
தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான படிவங்களை வழங்கிப் பேசியதாவது:
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள புதிய வாக்காளர்களைக் கண்டறிந்து, அவர்களை அதிமுகவினர் கட்சியில் சேர்க்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் தலா ஒரு லட்சம் புதிய உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய உறுப்பினர்களுக்கு ஒரு வாரத்தில் அடையாள அட்டை வழங்கப்படும் என்றார்.
கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் எஸ்.ராமச்சந்திரன், ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலர் அருள்பழனி மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...