மணல் கடத்தல்: 2 லாரிகள், பொக்லைன் இயந்திரம் பறிமுதல்

செய்யாறு அருகே ஞாயிற்றுக்கிழமை மணல் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட  2 லாரிகள், பொக்லைன் இயந்திரத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
Updated on
1 min read

செய்யாறு அருகே ஞாயிற்றுக்கிழமை மணல் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட  2 லாரிகள், பொக்லைன் இயந்திரத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
செய்யாறு காவல் துணைக் கண்காணிப்பாளர் குணசேகர், காவல் ஆய்வாளர் சுதாகர் மற்றும் போலீஸார் காழியூர் கிராமப் பகுதியில் தீவிர மணல் கடத்தல் தடுப்புச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்தக் கிராமத்தில் உள்ள செய்யாற்றில் இருந்து உரிய அனுமதியின்றி சிலர் லாரிகள் மூலம் ஆற்று மணலை அள்ளிக்கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அதிகாரிகள் அந்தப் பகுதிக்கு சென்ற நிலையில்,  ஆற்று மணலை அள்ளிக்கொண்டிருந்தவர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.
பின்னர், அந்தப் பகுதியில் இருந்த 2 லாரிகள், பொக்லைன் இயந்திரத்தை செய்யாறு போலீஸார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com