சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

குரலிசை, பரதநாட்டியம், ஓவியப் போட்டிகள்: பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம்

திருவண்ணாமலையில் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 6) நடைபெறும் குரலிசை, பரதநாட்டியம், நாட்டுப்புற நடனம், ஓவியப் போட்டிகளில்

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 1:50 am

DIN

திருவண்ணாமலையில் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 6) நடைபெறும் குரலிசை, பரதநாட்டியம், நாட்டுப்புற நடனம், ஓவியப் போட்டிகளில் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.
தமிழக அரசின் கலை, பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில், மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெறுகின்றன. இதையொட்டி, திருவண்ணாமலை மாவட்ட அரசு இசைப்பள்ளி வளாகத்தில் குரலிசை, பரத நாட்டியம், நாட்டுப்புற நடனம், ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற உள்ளன.
குரலிசை, பரத நாட்டியப் போட்டிகள் காலை 10 மணிக்கும், ஓவியம், நாட்டுப்புற நடனப் போட்டிகள் பிற்பகல் 2 மணிக்கும் நடைபெறுகின்றன. 5 முதல் 8 வயதுக்கு உள்பட்டோர், 9 முதல் 12 வயதுக்கு உள்பட்டோர், 13 முதல் 16 வயதுக்கு உள்பட்டோர் என 3 பிரிவுகளில் இந்தப் போட்டிகள் நடைபெறுகின்றன.
குரலிசை (வாய்ப்பாட்டு) போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகள் தனியாக குரலிசைப் பாட வேண்டும். ஒவ்வொருவருக்கும் அதிகபட்சம் 5 நிமிடம் அனுமதி வழங்கப்படும். இசையை முறையாகப் பயின்றவர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்கலாம். தமிழ்ப் பாடல்கள், கர்நாடக இசைப் பாடல்கள், தேச பக்திப் பாடல்களை மட்டுமே பாட வேண்டும். சினிமா பாடல்களுக்கு அனுமதியில்லை.
பரத நாட்டியம், நாட்டுப்புற நடனப் போட்டிகளில் ஒவ்வொருவருக்கும் அதிகபட்சம் 5 நிமிடம் அனுமதி வழங்கப்படும். முழு ஒப்பனை மற்றும் உரிய உடைகளுடன் நடனம் இருக்க வேண்டும்.  குழு நடனங்களுக்கு அனுமதி இல்லை. பக்க வாத்தியங்கள், ஒலி நாடாக்கள், குறுந்தகடுகளை பயன்படுத்திக் கொள்ளலாம். இவற்றை போட்டியில் பங்கேற்பவர்களே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.
ஓவியப் போட்டியில் பங்கேற்போர் அதற்கான தாள்களையே பயன்படுத்த வேண்டும். பென்சில், கிரையான் வண்ணங்கள், போஸ்டர் கலர், வாட்டர் கலர் பெயிண்டிங் வகைகளில் ஓவியங்கள் அமையலாம். ஓவியத்தாள், வண்ணங்கள், தூரிகைகள் உள்பட தங்களுக்குத் தேவையானவற்றைப் போட்டியாளர்களே கொண்டு வர வேண்டும். இதற்கான தலைப்புகள் போட்டி தொடங்கும்போது அறிவிக்கப்படும்.
போட்டியில் கலந்துகொள்ளும் மாணவ, மாணவிகள் தங்கள் பள்ளிகளில் இருந்து பிறந்த தேதி, வயதுக்கான சான்றை வாங்கி வர வேண்டும். போட்டியில் வெற்றி பெற்றவர்களின் விவரம் தொலைபேசியில் தெரிவிக்கப்படும். மாவட்ட அளவிலான போட்டிகளில் முதல் 3 இடங்களில் வெற்றி பெறுவோருக்கு பின்னர் நடைபெறும் விழாவில் பரிசுகள் வழங்கப்படும். போட்டிகளில் முதல் பரிசு பெறுவோர் மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பி வைக்கப்படுவர். எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் இந்தப் போட்டிகளில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
மேலும், விவரங்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட அரசு இசைப்பள்ளி, நெ.16, பவளக்குன்று மடாலயம், திருவண்ணாமலை என்ற முகவரியில் நேரிலோ அல்லது 04175-223545 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.