ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

சேத்துப்பட்டு பள்ளியில் உலகத் தரத்துக்கு இணையான கல்வி முறை தொடக்கம்

சேத்துப்பட்டு திவ்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலகத் தரத்துக்கு இணையான எக்ஸ்சீட் நேரடி கல்வி முறையை தாளாளர் பா.செல்வராஜன் புதன்கிழமை தொடக்கி வைத்தார்.

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 4:03 am

DIN

சேத்துப்பட்டு திவ்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலகத் தரத்துக்கு இணையான எக்ஸ்சீட் நேரடி கல்வி முறையை தாளாளர் பா.செல்வராஜன் புதன்கிழமை தொடக்கி வைத்தார்.
சேத்துப்பட்டு திவ்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் புதிய எக்ஸ்சீட் நேரடி கல்வி முறை தொடக்க விழா நடைபெற்றது. விழாவில் தாளாளர் பா.செல்வராஜன் தலைமை வகித்து, எக்ஸ்சீட் நேரடி கல்வி முறையை தொடக்கி வைத்தார். துணைத் தலைவர் செந்தில்குமார், செயலர் பிரவின்குமார், முதன்மை ஒருங்கிணைப்பாளர் பிரதாபன், நிர்வாக அலுவலர் சீனிவாசராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர் முரளி வரவேற்றார்.
விழாவில் தாளாளர் பா.செல்வராஜன் பேசியதாவது: மாணவர்கள் சுயமாக சிந்தித்து, உலகத்தரத்துக்கு இணையான கற்றல், கற்பித்தலில் வெற்றி பெற உலகத்தரத்தில் தலை சிறந்த நிறுவனமாகத் திகழும் எக்ஸ்சீட் நிறுவனம் மூலமாக வகுப்பறைக் கல்வியை மேலோங்கச் செய்ய பாடத் திட்ட முறை கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் தெளிவாக புரிந்துகொள்ளவும், ஆங்கிலத்தில் தவறில்லாமல் பேசவும்,எழுதவும் முடியும். இந்தக் கல்வி முறை மூலம் பயிலும் மாணவர்கள் நம் பள்ளிக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து, எக்ஸ்சீட் நிறுவன மண்டலத் தலைவர் அஸ்வின் பாலா, மாணவர்களுக்கு விளக்க உரையாற்றினார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.