திருவண்ணாமலையில் பசுமை வழிச் சாலைக்கு எதிரான போராட்டத்தில் கைதாகி சிறைக்குச் சென்று, ஜாமீனில் வந்த 65 விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் - சென்னை இடையிலான பசுமை வழிச் சாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, திருவண்ணாமலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், பசுமை வழிச் சாலை எதிர்ப்புக் கூட்டமைப்பு சார்பில் வெள்ளிக்கிழமை போராட்டம் நடைபெற்றது. அப்போது, பசுமை வழிச் சாலைக்கான அரசாணை நகலை விவசாயிகள் எரித்தும், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.
திருவண்ணாமலை அறிவொளிப் பூங்கா, திருவண்ணாமலை ரவுண்டானா பகுதிகளில் அரசாணை நகல் எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் டி.ரவீந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் எம்.சிவக்குமார், மாவட்டச் செயற்குழு எம்.வீரபத்திரன், தமிழக விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் வி.சுப்பிரமணி, மாவட்டத் தலைவர் டி.கே.வெங்கடேசன், பசுமை வழிச் சாலை எதிர்ப்பு இயக்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்களும், வழக்குரைஞர்களுமான எஸ்.அபிராமன், கு.ஜோதி, டி.பிரகாஷ் உள்ளிட்ட 95 விவசாயிகளை போலீஸார் கைது செய்தனர்.
சிறையில் அடைப்பு: கைது செய்யப்பட்ட 95 விவசாயிகளும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களை ஜாமீனில் விடுவிக்கக் கோரி, வழக்குரைஞர் பாசறை பாபு தலைமையிலான வழக்குரைஞர்கள் திருவண்ணாமலை ஜெ.எம். முதலாவது நீதிமன்றத்தில் சனிக்கிழமை மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிமன்றம், 95 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
மீண்டும் ஆர்ப்பாட்டம்: ஜாமீனில் வெளியே வந்த விவசாயிகளில் சுமார் 65 பேர் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை அறிவொளிப் பூங்கா எதிரே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் டி.ரவீந்திரன் தலைமை வகித்தார்.
நகல் எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை கைது செய்து சிறையில் அடைத்த திருவண்ணாமலை மாவட்டக் காவல் துறையைக் கண்டித்தும், பசுமை வழிச் சாலைத் திட்டத்தை கைவிடக் கோரியும் விவசாயிகள் முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திரிணமூல் அரசின் ஊழல் பணத்தை மீட்போம்- மேற்கு வங்கத்தில் அமித் ஷா பிரசாரம்

யாரை ஆட்சியில் அமர வைக்க திமுக கூட்டணியை வீழ்த்துவேன் என்கிறாா் விஜய்? தொல்.திருமாவளவன்

தொகுதி மறுசீரமைப்பு முயற்சியைக் கைவிட வேண்டும் - கேரள முதல்வா் வலியுறுத்தல்

தோ்தல் வாக்குறுதிகள் மூலம் மக்களை ஏமாற்ற நினைக்கிறாா் முதல்வா்: வி.கே.சசிகலா குற்றச்சாட்டு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

