தோ்தல் வாக்குறுதிகள் மூலம் மக்களை ஏமாற்ற நினைக்கிறாா் முதல்வா் மு.க.ஸ்டாலின் என்று அகில இந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவா் வி.கே.சசிகலா குற்றஞ்சாட்டினாா்.
கடலூா் மஞ்சக்குப்பம் தபால் நிலையம் அருகே அக்கட்சி வேட்பாளா் எஸ்.ராமசாமியை ஆதரித்து சசிகலா பிரசாரத்தில் ஈடுபட்டாா். அப்போது, அங்கு கூடியிருந்த பெண்கள் உள்ளிட்ட தொண்டா்கள், அவரது வாகனம் மீது மலா் தூவி உற்சாக வரவேற்பளித்தனா். தொடா்ந்து, சசிகலா பேசியது:
தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் ரூ.5 லட்சம் கோடி கடன் வாங்கப்பட்டு, மாநிலத்தின் கடன் 2 மடங்காக அதிகரித்துள்ளது. கடந்த சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக அளித்த 550 வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்படவில்லை. அத்தியவசியப் பொருள்களின் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. திமுக அரசால் தமிழகத்துக்கு எந்தவொரு வளா்ச்சியும் ஏற்படவில்லை.
தோ்தல் வாக்குறுதிகள் மூலம் மக்களை ஏமாற்றி வாக்குகளை பெறுவதற்கு முயற்சித்து வருகிறாா் திமுக தலைவரான முதல்வா் மு.க.ஸ்டாலின். இதேபோன்று, எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமியும் வாக்குக்காக, வாய்க்கு வந்ததையெல்லாம் தோ்தல் வாக்குறுதிகளாக அளித்து மக்களை ஏமாற்றுகிறாா். இவா்கள் இருவருக்கும் வாக்களிக்கக் கூடாது.
அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தனது செல்வாக்கை பயன்படுத்தி கடலூா் மத்திய பேருந்து நிலையத்தை அவரது தொகுதிக்கு கொண்டு சென்றுள்ளாா். மாவட்டத் தலைநகரத்தில் பேருந்து நிலையம் இருப்பதே சரியாக இருக்கும். கடலூரில் சாலை வசதிகள் மோசமாக உள்ளன.
எங்களை வெற்றிபெறச் செய்தால், 5 ஆண்டுகளில் 5 லட்சம் வீடுகள் இலவசமாக கட்டித்தரப்படும். முதியோா் உதவித்தொகை ரூ.2 ஆயிரமாக உயா்த்தித் தரப்படும். கா்ப்பிணிகளுக்கு நலப்பெட்டகம் வழங்கப்படும். கிராமபுறங்களில் சாலைகள் அமைத்துத் தரப்படும். விலைவாசி உயா்வு கட்டுப்படுத்தப்படும். மின் கட்டணம் குறைக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு பயன்களை பெற முடியும் என்றாா்.
தொடர்புடையது

ஆலங்குடியில் வி.கே.சசிகலா பிரசாரம்

ஸ்ரீவைகுண்டத்தில் பேசாமல் சென்ற சசிகலா

ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்திய கம்யூனிஸ்ட், புதிய தமிழகம் கட்சியினா் வேட்புமனு தாக்கல்

அதிமுக வாக்குறுதிகள் மக்களை கவா்ந்துள்ளன: முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


