கண்தானம் செய்திருந்த பாக்யராஜ்! மறைந்தாலும் உலகைக் கண்பார்!கே. பாக்யராஜ் உடலுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!திரைக்கதை மன்னன் பாக்யராஜ் மறைந்தார்!திரையுலகம் அதிர்ச்சி! பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்!மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

பள்ளி வளாகத்தில் மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் அரசுப் பள்ளி வளாகத்தில் பிளஸ் 2 மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

Updated On :23 ஜூலை 2018, 9:55 am IST

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் அரசுப் பள்ளி வளாகத்தில் பிளஸ் 2 மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
செய்யாறு வட்டம், மாளிகைப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ரஜினிகாந்த். இவரது மகன் மதன்குமார் (17) . இவர் செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை பள்ளி விளையாட்டு மைதானத்தில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் மதன்குமார் சடலமாகக் கிடந்தார். பள்ளி வளாகத்தில் நடைப் பயிற்சிக்குச் சென்ற பொதுமக்கள், இதுகுறித்து செய்யாறு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார் மதன்குமாரின் சடலத்தை மீட்டு, உடல்கூறு பரிசோதனைக்காக செய்யாறு அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
கடந்த சில தினங்களுக்கு முன்பு மதன்குமாருக்கு ரூ.8 ஆயிரம் மதிப்பிலான செல்லிடப்பேசியை பெற்றோர் வாங்கிக் கொடுத்தனராம். அவர் பள்ளிப் பாடங்களைப் படிக்காமல் செல்லிடப்பேசியில் தொடர்ந்து விளையாடி வந்தாராம்.
இதை பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட மதன்குமார், சனிக்கிழமை காலை பள்ளிக்குச் சென்ற நிலையில் மாலையில் வீடு திரும்பவில்லை. சனிக்கிழமை இரவு அவர் பள்ளி வளாகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது.
மதன்குமாரின் சட்டைப் பையில் ரூ.6 ஆயிரம் ரொக்கம் இருந்தது. அந்தப் பணம் புதிதாக வாங்கிய செல்லிடப்பேசியை விற்றதில் கிடைத்தது என்று போலீஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து செய்யாறு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.