கால்பந்து உலகக் கோப்பையில் மிகச் சிறிய நாடான கேப் வெர்டே நாக் அவுட் சுற்றுக்குத் தேர்வாகி வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளது.
வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் சௌதி அரேபியாவுடன் கேப் வெர்டே மோதியது. இந்தப் போட்டியில் இரு அணிகளுமே கோல் அடிக்காமல் ஆட்டம் 0-0 என முடிவடைந்தது.
மேற்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த கேப் வெர்டே முன்னாள் சாம்பியன் ஸ்பெயினுடன் 0-0 என டிரா, உருகுவே உடனும் 2-2 என டிரா செய்திருந்தது. தற்போது, சௌதி அரேபியாவுடனும் 0-0 என சமன்படுத்தியுள்ளது.
சௌதி அரேபியாவுடனான ஆட்டத்தில், கேப் வெர்டே 51 சதவிகித பந்தை தன்வசம் வைத்திருந்தது. 87 சதவிகித துல்லியத்துடன் பந்தை பாஸ் செய்து அசத்தியது. தனது அறிமுக உலகக் கோப்பையிலேயே நாக் அவுட் சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது.
மூன்று போட்டிகளிலும் டிரா செய்து 3 புள்ளிகளுடன் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. முன்னதாக, வேல்ஸ் 1958, அயர்லாந்து, நெதர்லாந்து 1990, சீலே 1998லும் இதே மாதிரி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
கேப் வெர்டேவின் மக்கள் தொகை வெறுமனே 5 லட்சம் என்பது கால்பந்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்தியா போன்ற மிகப்பெரிய நாடு இதுவரை ஒருமுறைக்கூட உலகக் கோப்பையில் பங்கேற்காதது கேள்விகளை எழுப்பி வருகின்றன.
40 வயதான கோல்கீப்பருக்கு இன்ஸ்டாகிராமில் ஒரே நாளில் 16 மில்லியன் (1.6 கோடி) பேர் பின்தொடர்ந்து ஊக்கம் அளித்தார்கள். இந்த கடைசி போட்டியிலும் 3 கோல்களை தடுத்து அசத்தினார்.
Summary
Cape Verde's dream run continues, becoming smallest country into World Cup knockout round
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









