போளூரை அடுத்த செண்பதோப்பு அணையில் போளூர் தீயணைப்பு நிலையம், வருவாய்த் துறை சார்பில், பொதுமக்களுக்கு வியாழக்கிழமை பேரிடர் மேலாண்மைப் பயிற்சி அளிக்கப்பட்டது.
தமிழகத்தில் தற்போது பரவலாக தென்மேற்கு பருவ மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. எனவே, பொதுமக்கள் ஆறு, ஏரி, அணை, குளம், குட்டையில் சிக்கிக்கொண்டால் எப்படி தப்பிப்பது என்பது குறித்தும், நீர்நிலைகளில் சிக்கிக்கொண்டவர்களை மீட்பது குறித்தும் போளூர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு தீயணைப்பு நிலையத்தினர், வருவாய்த் துறையினர் இணைந்து படவேட்டை அடுத்த செண்பகதோப்பு அணையில் பேரிடர் மேலாண்மைப் பயிற்சி அளித்தனர்.
நிகழ்ச்சியில் வட்டாட்சியர் மு.தியாகராஜன், தீயணைப்பு நிலைய அலுவலர் பழனிவேல், வருவாய் ஆய்வாளர் அருள்குமார் மற்றும் வருவாய்த் துறையினர், தீயணைப்பு ஊழியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேக்கேதாட்டு அணை; கன்னட அமைப்பினர் போராட்டம்: தமிழக அரசுப் பேருந்துகள் ஓசூர் வரை இயக்கம்!

இந்தியாவைக் காத்த வீரர்களுக்கு நன்றி: கார்கில் போர் நினைவுநாளில் பிரதமர் மோடி

மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டம் மீண்டும் நிராகரிப்பு! காரணம் என்ன?

அமெரிக்காவுக்கு எதிரான போரில் ஈரானுக்கு உதவும் ரஷியா: உக்ரைன் அதிபர் குற்றச்சாட்டு
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP


