பிகார் முதல்வர் பதவிலிருந்து விலகுகிறேன்! நிதீஷ் குமார் அறிவிப்பு!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

கல்லூரியில் பொருள்கள் விற்பனைச் சந்தை

தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம், வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரி ஆகியவை சார்பில், மாணவிகள், மகளிர் சுயஉதவிக் குழுவினர்

News image
Updated On :1 மார்ச் 2018, 2:39 am

DIN

தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம், வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரி ஆகியவை சார்பில், மாணவிகள், மகளிர் சுயஉதவிக் குழுவினர் தயாரித்த பொருள்களின் விற்பனைச் சந்தை கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில், திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மகளிர் சுயஉதவிக் குழுவினர், இந்தக் கல்லூரி மாணவிகள் தாங்கள் தயாரித்த பல்வேறு பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்தனர்.
நிகழ்ச்சிக்கு கல்லூரி நிறுவனர் பி.முனிரத்தினம் தலைமை வகித்தார். கல்லூரிச் செயலர் எம்.ரமணன் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் எஸ்.மைதிலி வரவேற்றார். திருவண்ணாமலை மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் பா.ஜெயசுதா, சந்தையை தொடக்கி வைத்து பார்வையிட்டார். மகளிர் திட்ட உதவி அலுவலர்கள் சி.டி.நாராயணசாமி, ஒய்.ஜான்சன், கல்லூரி துணை முதல்வர் கே.சுகுணா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த சந்தையில் விற்பனை செய்யப்பட்ட பொருள்களை கல்லூரி மாணவிகள் மற்றும் பொதுமக்கள் வாங்கிச் சென்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.