மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மாவட்ட மைய நூலகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் - 2 தேர்வுக்கு இலவசப் பயிற்சி

திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்தில் நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி குரூப் - 2 தேர்வுக்கான இலவசப் பயிற்சி முகாமில்

Updated On :29 மார்ச் 2018, 3:46 am

திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்தில் நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி குரூப் - 2 தேர்வுக்கான இலவசப் பயிற்சி முகாமில் தேர்வர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட மைய நூலகம் தெரிவித்தது.
திருவண்ணாமலை - செங்கம் சாலையில் மாவட்ட மைய நூலகம் இயங்கி வருகிறது. இங்கு பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், டிஎன்பிஎஸ்சி குரூப் - 2 தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.  அதன்படி, ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 முதல் மாலை 5 மணி வரை டிஎன்பிஎஸ்சி குரூப் - 2 தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் நடைபெறும். இந்த வாய்ப்பை தேர்வர்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மாவட்ட மைய நூலகர் பெ.வள்ளி தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.