மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு: 45 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்

சாத்தனூர் அணையில் இருந்து திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த 45 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் திங்கள்கிழமை தண்ணீர் திறக்கப்பட்டது.

Updated On :14 மே 2018, 10:54 pm

சாத்தனூர் அணையில் இருந்து திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த 45 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் திங்கள்கிழமை தண்ணீர் திறக்கப்பட்டது.
தண்டராம்பட்டு வட்டம், சாத்தனூர் அணையில் இருந்து பிப்ரவரி 7-ஆம் தேதி முதல் மே 8-ஆம் தேதி வரை 90 நாள்களுக்கு பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த 45 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்றது.
மீண்டும் தண்ணீர் திறக்கக் கோரிக்கை: இந்த நிலையில், இரண்டாம் போக சாகுபடிக்கு நேரடிப் பாசன நிலங்களில் உள்ள நெல் பயிர்கள் (சொர்ணவாரி பயிர்) பயன்பெறும் வகையில் மே 8-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை இடைவெளி விட்டு கூடுதலாக மீண்டும் 5 நாள்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளும், விவசாய சங்கப் பிரதிநிதிகளும் கோரிக்கை விடுத்தனர்.
5 நாள்களுக்கு தண்ணீர் திறப்பு: அதன்படி, மே 14-ஆம் தேதி காலை 8 மணி முதல் மே 19-ஆம் தேதி காலை 8 மணி வரை 5 நாள்களுக்கு அணையின் இடது, வலதுபுறக் கால்வாய்களில் முறையே 350 கன அடி, 220 கன அடி வீதம் தண்ணீர்த் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, திங்கள்கிழமை தண்ணீர் திறக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தலைமை வகித்தார். செங்கம் எம்.எல்.ஏ. மு.பெ.கிரி, கோட்டாட்சியர் உமா மகேஸ்வரி, பொதுப் பணித் துறை செயற்பொறியாளர் ஆர்.மணிமோகன், சாத்தனூர் அணை உதவிச் செயற்பொறியாளர் பி.வி.ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு அணையில் இருந்து தண்ணீரை திறந்துவிட்டார்.
நிகழ்ச்சியில் சாத்தனூர் அணை உதவிப் பொறியாளர்கள் கே.செல்வராஜு, ஜெ.கேசவராஜ், பி.ராஜேஷ் உள்பட அரசு அதிகாரிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்தத் தண்ணீர் திறப்பின் மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தின் 46 கிராமங்கள், விழுப்புரம் மாவட்டத்தின் 54 கிராமங்கள் என மொத்தம் 100 கிராமங்களில் உள்ள 45 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.