மின் நுகர்வோர் சேவை மையம் திறப்பு
திருவண்ணாமலை சினம் தொண்டு நிறுவனத்தில் மின் நுகர்வோர் சேவை மைய திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.


திருவண்ணாமலை சினம் தொண்டு நிறுவனத்தில் மின் நுகர்வோர் சேவை மைய திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
சென்னை சி.எ.ஜி., சக்தி நிறுவனம் ஆகியவற்றுடன் திருவண்ணாமலை சினம் தொண்டு நிறுவனம் இணைந்து நடத்தும் இந்த சேவை மையத்தின் தொடக்க விழாவுக்கு மின்வாரிய செயற்பொறியாளர் எம்.ராஜசேகரன் தலைமை வகித்தார்.
செயற்பொறியாளர்கள் சத்தியநாதன், சங்கரன், சந்திரசேகர், நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சினம் தொண்டு நிறுவன இயக்குநர் இராம.பெருமாள் வரவேற்றார். சி.எ.ஜி. நிறுவன முதுநிலை ஆலோசகர் விஷ்ணு, மின்சாரம் தொடர்பான பிரச்னைகள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், ஆற்றல் திறன் பயிற்சி, திறன் மேம்பாடு விழிப்புணர்வு, தொடர் பணிகள், சேவைகள், குறைதீர் முறைகள் ஆகியவற்றுக்கு மின் நுகர்வோர்கள் இந்த சேவை மையத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.
திருவண்ணாமலை மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் ஏ.நாகராஜன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு மின் நுகர்வோர் சேவை மையத்தை திறந்து வைத்துப் பேசுகையில், இந்த சேவை மையம் மின் வாரியத்துக்கும், பொதுமக்களுக்கு பாலமாக செயல்பட வேண்டும். மின் நுகர்வோர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்றார்.
சினம் தொண்டு நிறுவன இயக்குநர் இராம.பெருமாள் பேசுகையில், இந்த சேவை மையத்தில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் மின் நுகர்வோர்கள் தங்களது பிரச்னைகளை தெரிவிக்கலாம். நுகர்வோரின் பிரச்னைகளுக்கு மின்வாரிய அலுவலர்களுடன் தொடர்பு கொண்டு விரைந்து தீர்வு காணப்படும் என்றார்.
விழாவில் சி.எ.ஜி. நிறுவன அதிகாரிகள் பரத்ராம், ஸ்ரீதர், மின் ஆலோசகர் வி.ஆர்.ஆனந்தன், டி.அசோக்குமார் உள்பட திரளான மின் நுகர்வோர்கள், சினம் தொண்டு நிறுவனப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
இதையடுத்து, திருவண்ணாமலையை அடுத்த நூக்காம்பாடி, தானிப்பாடி பகுதிகளில் மின் நுகர்வோர் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த கூட்டங்களில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த மின் நுகர்வோர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...