திமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!பாஜக ஆட்சியில் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றப்படும்: ராஜ்நாத் சிங்பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ், திரிணமூல்: பாடம் புகட்டப்படும் - மோடி
/

வேட்டவலம் மலைப் பகுதியில் 480 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

வேட்டவலம் மலைப் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 480 லிட்டர் சாராய ஊறலை போலீஸார் பறிமுதல் செய்து அழித்தனர்.

Updated On :21 மே 2018, 2:12 am

வேட்டவலம் மலைப் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 480 லிட்டர் சாராய ஊறலை போலீஸார் பறிமுதல் செய்து அழித்தனர்.
வேட்டவலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் திருவண்ணாமலை மது விலக்கு அமல் பிரிவு போலீஸார் தீவிர சாராய விற்பனை தடுப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை வேட்டவலத்தை அடுத்த நடுத்திட்டு கிராமத்தில் மது விலக்கு அமல் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் அசோக்குமார், ஆய்வாளர் கவிதா ஆகியோர் தலைமையிலான போலீஸார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, மலைப் பகுதியில் பாறைகளுக்கு நடுவே இரும்பு பேரல்களில் பதுக்கி வைத்திருந்த 480 லிட்டர் சாராய ஊறலை போலீஸார் கைப்பற்றி அழித்தனர். இந்தப் பகுதியில் சாராயம் காய்ச்சுபவர்கள் யார் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.