துப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ.டிராமா செய்கிறார் திமுக எம்.எல்.ஏ! - நிர்மல் குமார்டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 14 காசுகள் சரிந்து ரூ. 96.44 ஆக நிறைவு!சென்செக்ஸ் 443 புள்ளிகள் சரிவு; நிஃப்டி 24,250-க்குக் கீழே வர்த்தகம்!பேச்சுவார்த்தைக்கு பதிலாக வன்முறையைத் தேர்வு செய்த பாஜக: கனிமொழி விமர்சனம்திரிபுரா டிஜிபி அலுவலகத்திற்கு உள்ளேயே டிஜிபி மர்ம மரணம்! உண்ணாவிரதத்தை முடித்தார் அபிஜீத் தீப்கே! ஜெ.பி. நட்டாவுடன் சிஜேபி நிர்வாகிகள் சந்திப்பு! தில்லி போராட்டம்: நாடாளுமன்றத்தின் கதவு மூடல்! தயார் நிலையில் சிஐஎஸ்எஃப் வீரர்கள்!வன்முறையால் மாணவர்கள் குரலை ஒடுக்க முயற்சி! மாநிலங்களவையில் கார்கே கண்டனம்!
/

போளூரில் ஜமாபந்தி நிறைவு: 493 பேருக்கு நலத் திட்ட உதவிகள்

போளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு விழாவில் 493 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை கலசப்பாக்கம் எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம் வழங்கினார்.

Updated On :25 மே 2018, 12:38 am IST

போளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு விழாவில் 493 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை கலசப்பாக்கம் எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம் வழங்கினார்.
போளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் க.வ.பரிமளா தலைமையில், கடந்த 17 முதல் 23-ஆம் தேதி வரை நடைபெற்ற ஜமாபந்தியில் போளூர் வட்டத்தைச் சேர்ந்த போளூர், சந்தவாசல், கேளூர், மொடையூர், மண்டகொளத்தூர் ஆகிய 5 உள் வட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு 1,468 மனுக்களை வழங்கினர்.
இந்த ஜமாபந்திக் கூட்டத்தின் நிறைவு விழா புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஜமாபந்தி அலுவலர் க.வ.பரிமளா தலைமை வகித்தார். வட்டாட்சியர் மு.தியாகராஜன், சமூக பாதுகாப்புத் திட்ட அலுவலர் சஜேஷ்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டல துணை வட்டாட்சியர் செந்தில்குமார் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக கலசப்பாக்கம் எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பட்டா மாற்றம், சிறு, குறு விவசாயிச் சான்று, வாரிசுச் சான்று, விபத்து நிவாரண உதவித்தொகை, திருமண நிதியுதவி, புதிய குடும்ப அட்டை என 493 பயனாளிகளுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.
இதில், வருவாய் ஆய்வாளர்கள் அருள்குமார், ரமேஷ்,
ஸ்ரீரஞ்சனி, தெய்வநாயகி, கிராம நிர்வாக அலுவலர்கள் சுதாகர், அருண்பிரசாத், மகாலிங்கம், சசிகுமார் மற்றும் வருவாய்த் துறையினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.