அரக்கோணத்தை அடுத்த சயனபுரத்தில் உள்ள கொளக்கியம்மன் மற்றும் பொன்னியம்மன் கோயில்களில் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் திருவிழா நடைபெற்றது.
அரக்கோணத்தை அடுத்த நெமிலி அருகே உள்ள ஊராட்சி சயனபுரம். இக்கிராமத்தில் கொளக்கியம்மன் மற்றும் பொன்னியம்மன் ஆகிய இரு அம்மன் கோயில்கள் தனித்தனியே அமைந்துள்ளன. இக்கோயில்களின் திருவிழா வைகாசி மாதத்தில் ஒரே நாளில் நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு திருவிழா செவ்வாய் மற்றும் புதன்கிழமை இரு தினங்களும் நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு, இரு அம்மன்களும் சிறப்பு அலங்காரத்தில் கிராமம் முழுவதும் வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தலைவர்கள் முன்னாள் ஊராட்சித் தலைவர்கள் எஸ்.சி.குப்பன், பி.சுந்தராம்பாள்பெருமாள், டி.லட்சுமி தமிழ்ச்செல்வன் ஆகியோர் தலைமையில் முன்னாள் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள் டி.சாந்திதிருமால், டி.மஞ்சுளா, நெமிலி ஒன்றிய திமுக செயலர் வடிவேலு, திமுக மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் எஸ்.ஜி.சி.பெருமாள், பாமக மாநில இளைஞரணி செயலர் பி.தீனதயாளன் ஆகியோர் கிராம பொதுமக்களுடன் இணைந்து செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









