கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

சங்கீதவாடியில் குடிநீர் பிரச்னையைப் போக்க ஆழ்துளை கிணறு அமைப்பு

ஆரணியை அடுத்த சங்கீதவாடி கிராமத்தில் குடிநீர் பிரச்னையைப் போக்கும் வகையில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்றை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார்.

Updated On :22 அக்டோபர் 2018, 3:58 am

ஆரணியை அடுத்த சங்கீதவாடி கிராமத்தில் குடிநீர் பிரச்னையைப் போக்கும் வகையில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்றை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார்.
சங்கீதவாடி கிராமத்தில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் போதிய தண்ணீர் இல்லாததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். தொடர்ந்து, அந்தக் கிராமத்தில் குடிநீர் வசதி ஏற்படுத்தித் தர அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரனிடம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில், உடனடியாக ரூ.3.5 லட்சத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கவும், அதில் மோட்டார் பொருத்தவும், குழாய்கள், குடிநீர்த் தொட்டி அமைக்கவும் அமைச்சர் ஏற்பாடு செய்தார்.
இந்தப் பணிகளை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ஞாயிற்றுக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, ஒன்றியச் செயலர்கள் பிஆர்ஜி.சேகர், எம்.வேலு, நகர ஜெயலலிதா பேரவைச் செயலர் பாரி பி.பாபு, பாசறை மாவட்டச் செயலர் ஜி.வி.கஜேந்திரன், முன்னாள் மாவட்டக் கவுன்சிலர் சேவூர் ஜெ.சம்பத், சங்கீதவாடி கிராமத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, சதாசிவம், செல்வராஜ், சேகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.