ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்.) 94-ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, அந்த சங்கத்தின் வேலூர் கோட்டம் சார்பில், வந்தவாசியில் அணிவகுப்பு ஊர்வலம், பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஊர்வலத்துக்கு திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் ஓய்வு பெற்ற பொது மேலாளர் பி.சுந்தரேசன் தலைமை வகித்தார். ஊர்வலத்தை பம்பை சேகர் குருசாமி கொடியசைத்து தொடக்கிவைத்தார்.
வந்தவாசி சன்னதி தெருவில் உள்ள பஜனை கோயில் அருகிலிருந்து தொடங்கிய ஊர்வலம் தேரடி, திண்டிவனம் சாலை, புதிய பேருந்து நிலைய அணுகுசாலை, காமராஜர் நகர் வழியாக சந்நிதி தெருவில் உள்ள ஸ்ரீஅங்காளம்மன் கோயில் அருகில் சென்றடைந்தது. இந்த ஊர்வலத்தில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் காக்கி பேண்ட், வெள்ளை சட்டை சீருடை அணிந்து பங்கேற்றனர்.
தொடர்ந்து, ஸ்ரீஅங்காளம்மன் கோயில் அருகில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். வட தமிழக மாநில அமைப்பாளர் பி.எம்.ரவிக்குமார் சிறப்புரை ஆற்றினார்.
கூட்டத்தில், மாம்பட்டு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் அறக்கட்டளைச் செயலர் ஆறு.லட்சுமண சுவாமிகள், ஆர்.எஸ்.எஸ். பொறுப்பாளர்கள் எஸ்.நாகராஜன், எஸ்.நீலகண்டன், கோ.ராமநாதன், ஜி.செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருவண்ணாமலை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி தலைமையிலான போலீஸார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மின்னல் பாய்ந்ததில் 2 விவசாயிகள் உயிரிழப்பு

காணாமல்போன 194 பேரை மீட்டு குடும்பத்தினருடன் சோ்த்துவைப்பு தில்லி காவல்துறை நடவடிக்கை

தெலங்கானாவில் மருந்து ஆலையில் வெடிவிபத்து: ஒருவர் பலி, 8 பேர் காயம்

ராயல் என்ஃபீல்டு விற்பனை 31 சதவீதம் அதிகரிப்பு!
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

