‘வந்தே மாதரம் முழுமையாகப் பாடப்போவதில்லை’ - கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் உறுதிமேட்டூர் அணையை ஆக. 28-ல் திறந்து வைக்கிறார் முதல்வர் விஜய்! ஏற்பாடுகள் தீவிரம்!தமிழ்நாட்டில் வேகமெடுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!பாகிஸ்தானின் மிகப்பெரிய மருத்துவமனையில் தீ! 15 பச்சிளம் குழந்தைகள் பலி! மோகன் பாகவத்தின் நியூயார்க் நிகழ்வுக்கு மேயர் மம்தானி எதிர்ப்பு!மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

அருணாசலேஸ்வரர் கோயில் இடைத்தரகர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் சுவாமி தரிசனத்துக்கு இடைத்தரகர்களாக செயல்படும் 15 பேர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்குமாறு நகர காவல் துறைக்கு மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி

Published On :30 ஜனவரி 2024, 10:12 pm IST

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் சுவாமி தரிசனத்துக்கு இடைத்தரகர்களாக செயல்படும் 15 பேர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்குமாறு நகர காவல் துறைக்கு மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஜி.மகிழேந்தி உத்தரவிட்டார்.
திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் ராஜகோபுரம் எதிரே திருவண்ணாமலை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஜி.மகிழேந்தி, சார்பு நீதிபதி ராஜ்மோகன் ஆகியோர் வியாழக்கிழமை திடீர் ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது, ராஜகோபுரம் எதிரே இருந்த ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து, மாலையில் கோயிலில் சுவாமி தரிசனத்துக்காக நின்றிருந்த பக்தர்களிடம் நீதிபதி விசாரித்தபோது, கோயிலில் சுவாமி தரிசனத்துக்கு ஏராளமான இடைத்தரகர்கள் உள்ளனர் என்றும், இடைத்தரகர்களுக்கும், கோயில் அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளதாகவும் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து, இணை ஆணையரிடம் நீதிபதி 
ஜி.மகிழேந்தி விசாரித்தபோது, கோயிலில் உள்ள இடைத்தரகர்கள் 15 பேர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஏற்கெனவே திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். உடனடியாக இணை ஆணையர் அளித்த புகாரின் மீது வழக்குப் பதிந்து 15 இடைத்தரகர்கள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறைக்கு நீதிபதி ஜி.மகிழேந்தி உத்தரவிட்டார்.
இதையடுத்து, கோயில் நெய் விற்பனைக் கூடம், வாகனங்கள் நிறுத்துமிடம், பொருள்கள் வைப்பறை என பல்வேறு இடங்களில் ஆய்வு செய்த நீதிபதி, கோயிலில் பழுதடைந்து நிறுத்திவைக்கப்பட்டுள்ள தங்க ரதத்தை சீரமைத்து இயக்க இந்து சமய அறநிலையத் துறைக்கு கடிதம் எழுதப்படும். இந்த ஆய்வு அறிக்கை 30 நாள்களுக்குள் மதுரை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.