தமிழ்நாடு மாநில நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில், மகளிர் சுயஉதவிக் குழுவினரின் உற்பத்திப் பொருள்கள் கண்காட்சி, உணவுத் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையர் செ.பாரிஜாதம் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு மகளிர் சுயஉதவிக் குழுவினரின் உற்பத்திப் பொருள்கள் கண்காட்சி, உணவுத் திருவிழாவைத் தொடக்கிவைத்தார்.
இதைத் தொடர்ந்து, மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் தங்களுடைய உணவுப் பொருள்கள், உற்பத்திப் பொருள்களை பார்வைபடுத்தி, விற்பனை செய்தனர். நிகழ்ச்சியில், உதவி ஆட்சியர் (பயிற்சி) மு.பிரசாத், மகளிர் திட்ட இயக்குநர் ப.சந்திரா, நகராட்சி ஆணையர் செ.பாரிஜாதம், கோட்டாட்சியர் ஸ்ரீதேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நாளை வேலைவாய்ப்பு முகாம்: இந்த நிலையில், திருவண்ணாமலை வேங்கிக்கால் பூமாலை வணிக வளாகத்தில் வியாழக்கிழமை (பிப்ரவரி 14) இளைஞர்களுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








