ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு அதிமுக எம்.எல்.ஏக்கள் மூன்று பேர் ராஜிநாமா?வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!மதுரையில் 17 வயது சிறுவன் கொலை - 5 பேர் கைது!மேக்கேதாட்டு அணை விவகாரம்: சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் விஜய் அறிவுறுத்தல்கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களை மே 31 வரை இலவசமாக பார்வையிடலாம் தூத்துக்குடி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதிப்பு! பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி
/

மார்ச் 1 முதல் 4 வரை  இணையதளம் மூலம் மின் கட்டணங்களை செலுத்த முடியாது

விழுப்புரம் மின்வாரிய அலுவலகத்தில் கணினி தொழில்நுட்ப மேம்பாட்டுப் பராமரிப்புப் பணிகள்

Updated On :25 பிப்ரவரி 2019, 8:43 am IST

விழுப்புரம் மின்வாரிய அலுவலகத்தில் கணினி தொழில்நுட்ப மேம்பாட்டுப் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், திருவண்ணாமலை மின்வாரிய நுகர்வோர்கள் மார்ச் 1 முதல் 4-ஆம் தேதி வரை இணையதளம் மூலம் மின் கட்டணம் செலுத்த முடியாது என்று மின் வாரியம் தெரிவித்தது.
இதுகுறித்து, திருவண்ணாமலை மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் நாகராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மான கழகத்தின் விழுப்புரம் மண்டலத்தில் மார்ச் 1-ஆம் தேதி முதல் 4-ஆம் தேதி வரை கணினி தொழில்நுட்ப மேம்பாட்டுப் பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது. எனவே, இந்த நாள்களில் திருவண்ணாமலை மின்வாரிய அலுவலகத்துக்கு உள்பட்ட மின் நுகர்வோர்கள் இணையதளம்  (ஆன்லைன்) மூலம் மின் கட்டணத்தைச் செலுத்த இயலாது. 
இந்தப் பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்து மார்ச் 5-ஆம் தேதி முதல் வழக்கம் போல் இணையதளம் செயல்படும். பின்னர், மின் நுகர்வோர்கள் தங்களது கட்டணங்களை இணையதளம் மூலம் செலுத்தலாம் என அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.