செய்யாறை அடுத்த பகவந்தப்புரம் கிராமத்தில் பள்ளிக்கு கல்வி சீர் அளிக்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வெம்பாக்கம் ஒன்றியம், பகவந்தப்புரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தக் கிராமத்தில் 1987-இல் ஊராட்சி ஒன்றிய தொடங்கப் பள்ளி தொடங்கப்பட்டது.
கடந்த 32 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்தப் பள்ளியில் ஒன்று முதல் 5-ஆம் வகுப்பு வரை 32 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இரு ஆசிரியர்களுடன் செயல்படும் இந்தப் பள்ளியை மேம்படுத்தும் விதமாக பள்ளிக்குத் தேவையான தொடுதிரை கருவி, நகலெடுக்கும் கருவி, டிவிடி பிளேயர், குறுந்தகடுகள், விளையாட்டு உபகரணங்கள், எழுது பொருள்கள், சில்வர் மற்றும் செம்பு பாத்திரங்கள், நாற்காலிகள், மேசைகள், தலைவர்களின் படங்கள் ஆகியவற்றை வழங்க முடிவு செய்தனர்.
பள்ளிக்குத் தேவையான உபகரணங்களை வழங்கும் நிகழ்ச்சியை கல்விச் சீர் விழாவாக ஊர் மக்கள் கொண்டாடினர்.
அதன்படி, ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருள்களை கிராம வீதிகள் வழியாக பூர்ண கும்பத்துடன் மேள தாளங்கள் முழுங்க பொதுமக்கள் கொண்டு சென்று பள்ளித் தலைமை ஆசிரியர் ஜே.பி.தேன்மொழி, உதவி ஆசிரியை மகாலட்சுமி ஆகியோரிடம் வழங்கினர்.
நிகழ்ச்சியில் பெற்றோர் -ஆசிரியர் கழகத் தலைவர் பஞ்சாட்சரம், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் பரமேஸ்வரி, வெம்பாக்கம் வட்டாரக் கல்வி அலுவலர் இ.பலராமன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் பிர்லா, ஆசிரியர் பயிற்றுநர்கள், மாணவர்களின் பெற்றோர்கள், கிராம மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முத்தரப்பு தொடர்: இந்திய அணியில் ரியான் பராக்கிற்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட்!

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

இன்றைய செய்திகள் மே 31 - நேரலை!

ஆளுநர் மாளிகையை ஆர்எஸ்எஸ் மாளிகையாக மாற்ற முயற்சி: அமைச்சர் வன்னி அரசு கண்டனம்!
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK


