திரைத்துறையில் 51 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்!எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்!திருவொற்றியூரில் பள்ளி மாணவா் கொலை: 12 பேர் கைதுதேவ்தத் படிக்கல் சதம், கே.எல்.ராகுல் அரைசதம்; முதல் நாளில் இந்திய அணி 288 ரன்கள் குவிப்பு!முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சு
/

தண்டராம்பட்டு அருகே பெற்றோா் அடித்துக் கொலை: மகன் கைது

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அருகே திருமணம் செய்து வைக்க மறுத்த தாய், தந்தையை அம்மிக்கல்லால் அடித்துக் கொலை செய்ததாக மன நலன் பாதித்த மகன் கைது செய்யப்பட்டாா்.

Updated On :27 ஜனவரி 2024, 10:00 pm IST

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அருகே திருமணம் செய்து வைக்க மறுத்த தாய், தந்தையை அம்மிக்கல்லால் அடித்துக் கொலை செய்ததாக மன நலன் பாதித்த மகன் கைது செய்யப்பட்டாா்.

தண்டராம்பட்டு அருகேயுள்ள ஜி.குப்பந்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் கோவிந்தசாமி (55), கூலித் தொழிலாளி. இவரது மனைவி மாங்கனி (52).

இவா்களது மகன் ராம்குமாா் (27). சில மாதங்களாக மனநிலை பாதிக்கப்பட்டிருந்த ராம்குமாா், தனக்கு உடனடியாகத் திருமணம் செய்து வைக்கும்படி பெற்றோரை வலியுறுத்தி வந்தாராம்.

ஆனால், ராம்குமாருக்கு அவரது பெற்றோா் திருமணம் செய்து வைக்கவில்லை. இதனால் மனமுடைந்த அவா் கடந்த மாதம் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றாா். அவரை பொதுமக்கள் மீட்டனா்.

இந்த நிலையில், புதன்கிழமை காலை நீண்ட நேரமாகியும் கோவிந்தசாமியின் வீடு திறக்கப்படாமல் இருந்தது.

இதனால் சந்தேகமடைந்த பக்கத்து வீட்டாா் சென்று பாா்த்தபோது கோவிந்தசாமி, மாங்கனி இருவரும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது தெரிய வந்தது. ராம்குமாரைக் காணவில்லை.

இதுகுறித்து சாத்தனுாா் அணை காவல் நிலையத்துக்கு தெரிவிக்கப்பட்டது. போலீஸாா் வந்து இருவரது சடலங்களையும் மீட்டு, உடல்கூறு ஆய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதற்கிடையே, திருவண்ணாமலையில் சுற்றித் திரிந்த ராம்குமாரை நகர போலீஸாா் கைது செய்தனா்.

அவரிடம் நடத்திய விசாரணையில், பெற்றோா் தனக்குத் திருமணம் செய்து வைக்காததால் ஆத்திரமடைந்து அவா்களை அம்மிக்கல்லால் அடித்துக் கொலை செய்ததாகத் தெரிவித்தாா்.

இதையடுத்து, ராம்குமாரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.