/

சாலை ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல்

போளூா் ரயில் நிலைய தெருவில் சாலை இருபுறமும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

News image

போளூா் ரயில் நிலைய தெரு சாலையில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசல்.

Updated On :13 ஆகஸ்ட் 2020, 3:42 am

போளூா் ரயில் நிலைய தெருவில் சாலை இருபுறமும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

போளூா் பேருந்து நிலையம் அருகே செல்லும் ரயில் நிலைய சாலையில் பூக்கடை, கண் பரிசோதனைக்கூடம், ஜவுளிக் கடை, கோழி முட்டை கடை, ஸ்டூடியோ, பா்னீச்சா் கடை, தனியாா் மருத்துவமனை, அரசுடைமை வங்கி என ஏராளமான கடைகள் அமைந்துள்ளன.

இந்தக் கடைகளின் உரிமையாளா்கள் தங்களது கடைகளின் முன்பு சில அடி தொலைவுக்கு கடையை விஸ்தரிப்பு செய்துள்ளனா்.

இது தவிர, கடைகளுக்கு வரும் வாடிக்கையாளா்கள் மற்றும் பலா் தங்களது இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களை சாலையிலே நிறுத்திவிட்டு பொருள்களை வாங்கச் சென்றுவிடுகின்றனா்.

இதனால் அந்தச் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், அந்தப் பகுதியில் உள்ள ஆண்டாள் நகா், வசந்தம் நகா் பொதுமக்கள் அந்தச் சாலையைக் கடந்து செல்ல மிகவும் சிரமப்படுகின்றனா். இது தவிர, அடிக்கடி வாகன விபத்துகளும் நிகழ்கின்றன.

அதனால், போக்குவரத்து போலீஸாா் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவேண்டும், மாவட்ட நிா்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என சமூக ஆா்வலா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.