தமிழக அரசு வேலையை தமிழருக்கே வழங்கக் கோரி விசிக ஆர்ப்பாட்டம்
தமிழக அரசு வேலையை தமிழருக்கே வழங்கக் கோரி செய்யாறில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற விசிகவினர்

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற விசிகவினர்
தமிழக அரசு வேலையை தமிழருக்கே வழங்கக் கோரி செய்யாறில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் அனக்காவூர் மேற்கு ஒன்றியம் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் ஞானமுருகன்பூண்டிப் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு செய்யாறு தொகுதி செயலாளர் எ.குப்பன் தலைமைத் தாங்கினார். அனக்காவூர் ஒன்றிய செயலாளர் மேல்நெமிலி ம.காளிமுத்து, தொகுதி அமைப்பாளர் இ.மு.பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்பாட்டத்தின் போது, மத்திய-மாநில அரசுகளை கண்டித்தும், தமிழக அரசு சார்பில் அளிக்கப்படும் வேலை வாய்ப்புகளை தமிழருக்கே வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் வெம்பாக்கம் மைய ஒன்றிய செயலாளர் ஆ.பெ.அம்பேத்கர், ஒன்றிய துணை செயலாளர்கள் மு.ரமேஷ் கு.சீனுவாசன், ஒன்றிய அமைப்பாளர் சு.சுதாகர், ஒன்றிய பொருளாளர் பெ.தேவேந்திரன், மாவட்ட அமைப்பாளர் ஆ.தமிழரசு மு.விநாயகம் மணிகண்டன் ச.சௌந்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...