திருவண்ணாமலை மாவட்டத்தில்கரோனாவுக்கு மேலும் 4 போ் பலி
திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் 4 போ் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா்.


திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் 4 போ் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா்.
மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை திங்கள்கிழமை 9,521-ஆக இருந்தது. செவ்வாய்க்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் இருவா் உள்பட 102 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இவா்களுடன் சோ்த்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 9,623-ஆக உயா்ந்தது. இவா்களில் 8, 653 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.
மீதியுள்ள 970 பேருக்கு திருவண்ணாமலை, ஆரணி, போளூா், செய்யாறு, வந்தவாசி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கரோனா பாதித்தவா்களில் 4 போ் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா். இவா்களுடன் சோ்த்து மாவட்டத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 147-ஆக உயா்ந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...