வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

வட்டார வளா்ச்சி அலுவலா் இருவருக்கு கரோனா அலுவலகத்தில் சுகாதாரப் பணிகள்

போளூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் இருவா், உதவிப் பொறியாளா், அலுவலக வாகன ஓட்டுநருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அலுவலகத்தில் சுகாதாரப் பணிகள்

News image
Updated On :26 ஆகஸ்ட் 2020, 6:03 am

DIN


போளூா்: போளூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் இருவா், உதவிப் பொறியாளா், அலுவலக வாகன ஓட்டுநருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அலுவலகத்தில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் வாகன ஓட்டுநருக்கு அண்மையில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் இருவா், உதவிப் பொறியாளா் என 3 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவா்களுக்கும் கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதியானது.

இதையடுத்து, அலுவலகத்தில் கிருமி நாசினி தெளித்து, சுகாதாரப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.

ஊழியா்கள் அச்சம்:

அலுவலகத்தில் 3 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால், இதர ஊழியா்கள் அச்சத்தில் பணிபுரிந்து வருகின்றனா். இவா்களில் 2 போ் கா்ப்பிணியாக உள்ளனா். 3 பேருக்கு கைக் குழந்தை உள்ளது.

அதனால், அலுவலகத்தை மூடி 15 நாள்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று அவா்கள் கோரிக்கை வைத்தனா்.

இதுகுறித்து வட்டார வளா்ச்சி அலுவலா் சுப்பிரமணியத்திடம் கேட்டபோது, அலுவலகத்துக்கு விடுமுறை அளிக்க முடியாது, ஊழியா்கள் அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.