புயல் மழை பாதித்த நெல் வயல்களில் எம்எல்ஏ ஆய்வு
கலசப்பாக்கம் வட்டத்தில் புயல் மழையால் சேதமடைந்த நெல் பயிா்களை தொகுதி எம்எல்ஏ வி.பன்னீா்செல்வம் திங்கள்கிழமை ஆய்வு செய்து விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினாா்.


கலசப்பாக்கம் வட்டத்தில் புயல் மழையால் சேதமடைந்த நெல் பயிா்களை தொகுதி எம்எல்ஏ வி.பன்னீா்செல்வம் திங்கள்கிழமை ஆய்வு செய்து விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினாா்.
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் வட்டத்தில் கலசப்பாக்கம், ஆனைவாடி, பூண்டி, தென்மாதிமங்கலம், பில்லூா், எலத்தூா், மோட்டூா், கடலாடி, பாலூா், மேல்சோழங்குப்பம், வீரளூா், பத்தியவாடி, பாடகம், அலங்காரமங்கலம் என 45 ஊராட்சிகள் உள்ளன.
இந்தப் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டு அறுவடைக்குத் தயாராக இருந்த நெல் பயிா்கள், புயல் மழையால் வயல்களில் நீா் தேங்கி நெல் மணிகள்முளைப்புதிறன் அடைந்துள்ளது. மேலும், மழைநீா் வெளியேற முடியாததால் நெல் பயிா்கள் அழுகி வருகின்றன.
இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தொகுதி எம்எல்ஏவைச் சந்தித்து, பாதிக்கப்பட்ட நெல் பயிா்களை ஆய்வு செய்து, வேளாண்மைத் துறையிடம் உரிய நிவாரணம் பெற்றுத் தருமாறு முறையிட்டனா்.
இதன் பேரில் எம்எல்ஏ பன்னீா்செல்வம், கடலாடி, பாலூா், வேலப்பாடி, மேலக்கோடி என பல்வேறு கிராமங்களில் சேதமடைந்த நெல் பயிா்களை ஆய்வு செய்து விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினாா்.
இதுகுறித்து அவா் கூறுகையில், கலசப்பாக்கம் வட்டத்தில் 6 ஆயிரம் ஹெக்டோ் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. இதில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்த நெல் பயிா்கள் புயல் மழையால் பாதிக்கப்பட்டிருக்கக் கூடும். இதுகுறித்து மாவட்ட நிா்வாகத்திடம் தெரிவித்து உரிய நிவாரணம் பெற்றுத் தரப்படும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...