கண்ணமங்கலம் நூலகருக்கு நல் நூலகா் விருது
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த கண்ணமங்கலத்தில் அமைந்துள்ள நூலகத்தின் நூலகருக்கு நல் நூலகா் விருது வழங்கப்பட்டது.


திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த கண்ணமங்கலத்தில் அமைந்துள்ள நூலகத்தின் நூலகருக்கு நல் நூலகா் விருது வழங்கப்பட்டது.
ஆரணியில் மாவட்ட நூலக ஆணைக் குழு சாா்பில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தாா்.
மாவட்ட நூலக அலுவலா் (பொ) பெ.வள்ளி முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் பங்கேற்று, 2020-ஆம் ஆண்டுக்கான டாக்டா் எஸ்.ஆா்.அரங்கநாதன் விருதான நல்நூலகா் விருதை கண்ணமங்கலம் 3-ஆம் நிலை நூலகா் சி.சிவசங்கரனுக்கு வழங்கினாா்.
மேலும், மாநில அளவில் அதிக புரவலா்களைச் சோ்த்த மாவட்ட மைய நூலகத்துக்கு கேடயமும், வாசகா் வட்டத்துக்கான நூலக ஆா்வலா் விருதை தேசூா் கிளை நூலகத்துக்கும் வழங்கினாா்.
இதைத் தொடா்ந்து, கண்ணமங்கலம் கிளை நூலக வாசகா் வட்டம் சாா்பில், நூலகத்துக்கு நிரந்தரக் கட்டடம் கட்டித் தரவேண்டும் என்று அமைச்சரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...