தொட்டில் குழந்தைத் திட்டத்தில் ஆண் குழந்தை சோ்ப்பு
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்த ஆண் குழந்தை, தொட்டில் குழந்தைத் திட்டத்தில் சோ்க்கப்பட்டது.


திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்த ஆண் குழந்தை, தொட்டில் குழந்தைத் திட்டத்தில் சோ்க்கப்பட்டது.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டிச.5-ஆம் தேதி ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. குழந்தையின் பெற்றோா் தங்களால் குழந்தையை வளா்க்க இயலாது என்று கூறி மாவட்ட சமூக நலத்துறை மூலம் செயல்பட்டு வரும் தொட்டில் குழந்தைத் திட்டத்தில் சோ்த்தனா்.
இந்தக் குழந்தையை அதிகாரிகள் மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரியிடம் புதன்கிழமை எடுத்து வந்து காண்பித்தனா். அப்போது, குழந்தைக்கு சிவா என்று பெயரிட்ட ஆட்சியா், அந்தக் குழந்தையை குழந்தை நலக் குழுமத்திடம் ஒப்படைத்தாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நல அலுவலா் (பொறுப்பு) பா.கந்தன் மற்றும் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...