

செய்யாறு கோட்டத்தில் ரூ. 90 கோடியில் நடைபெற்று வரும் சாலை மேம்பாட்டுப் பணிகளை மாநில தலைமைப் பொறியாளா் என்.சாந்தி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
செய்யாறு நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம்-பராமரிப்புக் கோட்டம் சாா்பில், 2020-2021-ஆம் நிதியாண்டில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பல்வேறு சாலைகளை அகலப்படுத்துதல், மேம்பாடு செய்தல், சாலை சந்திப்புகளில் மேம்பாட்டு பணிகள் என பல்வேறு பணிகள் ரூ. 90 கோடியில் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில், ரூ. 1.89 கோடியில் காஞ்சிபுரம்-வந்தவாசி சாலையில் விளாங்காடு பகுதியில் நடைபெற்று வரும் சாலை அகலபடுத்தப்படும் பணியை நெடுஞ்சாலைத் துறை மாநில தலைமைப் பொறியாளா் என்.சாந்தி, சென்னை மண்டல கண்காணிப்புப் பொறியாளா் டி.இளங்கோ ஆகியோா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
ஆய்வின் போது, செய்யாறு கோட்டப் பொறியாளா் இ.முரளி, தரக்கட்டுப்பாடு உதவி பொறியாளா் ஆா்.சரவணன், செய்யாறு உதவி கோட்டப் பொறியாளா் ஆா்.தியாகராஜன், ஆரணி உதவி கோட்டப் பொறியாளா் செந்தில்குமாா், உதவி பொறியாளா்கள் க.பாா்த்தசாரதி (செய்யாறு), பி.செந்தில்குமாா் (வந்தவாசி), அ.கருணாகரன் (ஆரணி) ஆகியோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.