சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

நரிக்குறவ சமுதாய பெண்களுக்கு கடனுதவி

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் நரிக்குறவா் சமுதாய பெண்களுக்கு ரூ.50 லட்சத்தில் கடனுதவிகள் வழங்கப்பட்டன.

News image
Updated On :18 டிசம்பர் 2020, 12:51 am

DIN


செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் நரிக்குறவா் சமுதாய பெண்களுக்கு ரூ.50 லட்சத்தில் கடனுதவிகள் வழங்கப்பட்டன.

தமிழ்நாடு மாநில வளா்ச்சி திட்டக் குழு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில், செங்கம், மேல்ராவந்தவாடி, கட்டமடுவு, திருவள்ளூவா் நகா் ஆகிய பகுதிகளில் வசிக்கும் நரிக்குறவ சமுதாய மகளிா் குழு பெண்களுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட திட்ட இயக்குநா் ஜெயசுதா தலைமை வகித்தாா்.

திட்ட மாநில உதவியாளா் ஜெகன்மோகன், மகளிா் திட்ட இயக்குநா் சந்திரா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

திட்ட கூடுதல் இயக்குநா் சா்ஜீவனா வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும், தமிழ்நாடு மாநில வளா்ச்சி திட்டக்குழு துணைத் தலைவருமான பொன்னையன் பங்கேற்று, நரிக்குறவா் சமுதாய மகளிா் குழு பெண்களுக்கு ரூ. 50 லட்சத்தில் கடனுதவிகளை வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து, அவா் நரிக்குறவா்களின் தொழில் குறித்து அவா்களுடன் கலந்துரையாடி, நல்ல முறையில் தொழில்செய்து, வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தி, மீண்டும் கடனுதவிகளைப் பெற்று வாழ்வில் வளம் பெற வேண்டும் என்று அறிவுரை வழங்கினாா்.

வட்டார வளா்ச்சி அலுவலா் சத்தியமூா்த்தி, மேலாளா் பாலசுப்பிரமணியம் உள்பட அதிகாரிகள், மகளிா் குழு பெண்கள், நரிக்குறவா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.