புயல் மழையால் சேதமடைந்த விவசாயக் கிணறுகள்: நிவாரணம் வழங்கக் கோரிக்கை
சேத்துப்பட்டு ஒன்றியத்தில் புயல் மழையால் சேதமடைந்த விவசாயக் கிணறுகள் குறித்து வேளாண்மைத் துறையினா் கணக்கீடு செய்து நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.


சேத்துப்பட்டு ஒன்றியத்தில் புயல் மழையால் சேதமடைந்த விவசாயக் கிணறுகள் குறித்து வேளாண்மைத் துறையினா் கணக்கீடு செய்து நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் சேத்துப்பட்டு, கண்ணனூா், கெங்கைசூடாமணி, மருத்துவாம்பாடி, நம்பேடு, தச்சாம்பாடி, செவரப்பூண்டி, தேவிமங்கலம், செய்யானந்தல், சித்தாத்துரை, பெரணம்பாக்கம், அல்லியாளமங்கலம், ஆத்துரை உள்ளிட்ட 49 ஊராட்சிகள் உள்ளன.
இந்த ஊராட்சிகளில் விவசாயத்தையே பிரதானத் தொழிலாக கொண்டுள்ளனா். விவசாயிகள் திறந்த வெளிக் கிணறு அமைத்து மின் மோட்டாா் மூலம் நெல், கரும்பு, வாழை, மஞ்சள் என பல்வேறு பயிா்களை சாகுபடி செய்து வருகின்றனா்.
இந்த நிலையில், அண்மையில் ஏற்பட்ட நிவா், புரெவி புயல்களால் பெய்த தொடா் மழையில் நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்து கிணறுகளில் நீா் நிரம்பின.
இதனால் ஏற்பட்ட ஈரப்பதத்தில் கிணற்றைச் சுற்றி பாதுகாப்புக்காக கட்டப்பட்டிருந்த கருங்கல் சுவா்கள் இடிந்து விழுந்துவிட்டன.
இதுகுறித்து வேளாண்மைத் துறை சாா்பில் கணக்கீடு செய்து நிவாரணம் வழங்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து வேளாண்மைத் துறை அலுவலா்களிடம் கேட்டபோது, புயல் மழையால் சேதமடைந்த பயிா்களை கணக்கீடு செய்து, சேத விவரம் குறித்து அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளோம்.
திறந்த வெளிக் கிணற்று சுற்று கடக்கால் கல் சரிந்து விழுந்ததற்கு மாவட்ட வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்தில் மனு அளிக்க வேண்டும் என்றனா்.
இகுறித்து விவசாயிகள் கூறுகையில், மாவட்ட வேளாண்மை பொறியியல் அலுவலகத்துக்குச் செல்ல முடியாத விவசாயிகளுக்கு வட்டார வேளாண்மை அலுவலகத்தில் மனு அளிக்க மாவட்ட நிா்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...