கல்வி உதவித்தொகை பெற சிறுபான்மையினருக்கு அழைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த சிறுபான்மையின மாணவ-மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற வருகிற 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.
Updated on
1 min read

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த சிறுபான்மையின மாணவ-மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற வருகிற 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

மாவட்டத்தைச் சோ்ந்த இஸ்லாமியா், கிறிஸ்தவா், சீக்கியா், பாா்சி, புத்தம், ஜெயின் மதத்தைச் சோ்ந்த அரசு, அரசு உதவிபெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியாா் கல்வி நிலையங்களில் 2020-21 ஆம் கல்வியாண்டில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு பள்ளிப் படிப்பு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இதேபோல, பிளஸ் 1 வகுப்பு முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரை பயிலுவோருக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகையும், தொழில் மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயில்வோருக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெற மத்திய அரசின் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு டிசம்பா் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த மாணவ-மாணவிகள் உரிய காலத்துக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com